சாலையோர தடுப்பில் மோதி கோர விபத்தில் சிக்கிய வேன் - ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேர் பலி

Update: 2023-01-22 11:46 GMT

புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சார்ந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் தமிழரசி வினோதினி விக்னேஸ்வரன் அலியோன் விலானி (குழந்தை) உட்பட 6 பேர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர்.


 விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு வந்த அவர்கள் இன்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான புதுச்சேரிக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை சாலையோரம் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது இதில் சாலையோர கம்பி வேனின் நடுவே கிழித்துக்கொண்டு பின்பக்கம் 50 அடிக்கும் மேல் சென்றது வேனில் பயணித்த ஓட்டுனர் உட்பட ஒன்பது பேரும் பலத்த காயத்துடன் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கிளியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்

 



 



Tags:    

மேலும் செய்திகள்