"அன்பே டயானா... " இளசுகளின் காதலுக்கு உதவி செய்யும் Chatgpt - லவ் லெட்டர் எழுதி கேட்டு குவியும் இந்தியர்கள்
உ யிரை பிசையும் உன்னத காதலை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காதலரும் உள்ளம் உருகும் அழகிய மொழியில் சொல்லத்தான் ஆசைப்படுகிறார்கள்... ஆனால் அவ்வளவு அழகான மொழி நடை எல்லோருக்கும் சாத்தியப்படு வதில்லை...
தனக்குள் இருக்கும் கவித்துமான காதலை வெளிப்படுத்த தெரியாமல் தவிக்கும் காதலர்கள் ஏராளம். அவர்களுக் கெல்லாம் வழித்துணையாக வந்திருக்கிறது சாட் ஜிபிடி!
இனி லவ் லெட்டர் எழுத தெரிய வில்லை என்ற கவலை துளியும் வேண்டாம்...இருக்கவே இருக்கு நம்ம சாட்ஜிபிடி என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள், இளைஞர்கள்.
நாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சட்டென்று மிக துள்ளியமாக பதிலளித்து வருகிறது சாட் ஜிபிடி.
பல தேர்வுகளில் மாணவர்களை பாஸ் செய்ய வைத்து வரும் சாட்ஜிபிடி நிச்சயம் தங்களை காதலிலும் பாஸ் பண்ண வைத்துவிடும் என்பது அவர்களின் கணக்கு!