கடல் போல் மாறிய வைகை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Update: 2022-08-01 06:54 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை நேற்று 66 அடியை எட்டியுடவுடன கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 68.50 அடியை எட்டிய நிலையில், இரண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நாளை காலைக்குள் அணையின் முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 69 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்படும். இந்நிலையில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் திறப்பு குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட உள்ளதால் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகை அணை எந்த நேரத்திலும் முழுகொள்ளளவை எட்டும் என்பதால் அணை நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்