அமெரிக்க அரசின் கடன் 31.4 லட்சம் கோடி டாலர் - ஜோ பைடன் அரசுக்கு சிக்கல்
அமெரிக்க அரசின் மொத்த கடன் அளவுக்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பான, 31.4 லட்சம் கோடி டாலர் அளவை நேற்று எட்டியுள்ளது. வரவுக்கு மேல் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளதால், பற்றாகுறையை ஈடுகட்ட மேலும் மேலும் கடன் வாங்கி சமாளித்து வருகிறது. கடன் உச்சவரம்பை மேலும் அதிகரிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். பிரதிநிதிகள் சபையில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், கடன்
உச்சவரம்பை அதிகரிக்க செய்வதில், ஜோ பைடன் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.