துருக்கியில் ஓயாத மரண ஓலங்கள்.."வர போகும் அடுத்த ஆபத்து.." - எச்சரித்த WHO
துருக்கி மற்றும் சிரியாவில் தண்ணீரால் நோய் பரவும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமாகியுள்ளதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பனிப்பொழிவால் மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், சுகாதார கேடால், கொரோனா மற்றும் பருவக் காய்ச்சலும் பரவும் என எச்சரித்துள்ளது. 80 ஆயிரம் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சுகாதார அமைப்புக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், மருத்துவ உதவிகள் அதிகப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது.