நிறுத்திக்கொள்ளுங்கள்...இல்லாவிட்டால்... - பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட அழுத்தமே, பாகிஸ்தான் அமைச்சர்களின் மிரட்டலுக்கு காரணம் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பிரதமர் மோடி அரசு கடைபிடிக்கும் அணுகுமுறையால் 2014 முதல் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் 168 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட விவகாரத்தில் 94 சதவீதம் பேருக்கு தண்டனை பெற்று தந்திருப்பதாக விளக்கம் அளித்தார். இதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்களே காரணம் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் கைவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் எச்சரித்துள்ளார்.