2023 - 2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார் இந்நிலையில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்கிறார்.
இது, இவரது 5வது பட்ஜெட்டாகும். இதில், வரிச்சலுகை, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் அதிக சலுகைகள் இருக்கலாம் என மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.