"நான் வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - 2 ஆண்டு தடை பின் திரும்பிய ட்ரம்ப்

Update: 2023-03-18 16:50 GMT

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி, நாடாளுமன்ற தாக்குதலுக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவரது சமூக வலைதள பக்கங்கள் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில், தடைக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரம்ப் தனது முதல் பதிவை ஃபேஸ்புக் மற்றும் யூ டியூபில் எழுதியுள்ளார்... "I'M BACK"... நான் திரும்பவும் வந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், கூடவே கடந்த 2016ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆற்றிய வெற்றி உரையையும் உடன் இணைத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்