கள்ளக்குறிச்சியில் மாணவருக்கு நடந்த பரிதாபம் - கல்லுரி முழுவதும் குவிக்கப்பட்ட போலீஸ்

Update: 2022-11-10 05:47 GMT

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள அந்த கல்லூரியில், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் திவாகர், பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மாலை கல்லூரி முடிந்த பிறகு, தனக்குச் சொந்தமான பைக்கில், அவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது, இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி மாணவன் உயிரிழந்தாகத் தெரிகிறது. இதையடுத்து, மாணவனின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வாளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்