கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பியர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தில் திடீரென சுழன்றடித்த சூறாவளி தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சூறாவளி தாக்கத்தால் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. குப்பை கூளங்கள் அந்தரத்தில் பறந்த நிலையில், சூறாவளி பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என பியர்ட்டோ ரிக்கோ பிராந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.