நாளை தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி...
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ள தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்காக உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆறாம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாததால் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் தான் விழா கமிட்டியினர் மற்றும் அந்த பகுதி மக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு குறைபாடுகள் களையப்பட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் படி சீர் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மாவட்ட நிர்வாகத்தால் என்னென்ன குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதோ அதனை நிவர்த்தி செய்யும் பணியில் விழா கமிட்டியினர் மற்றும் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஆன்லைன் மூலமாக ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது