இன்றைய தலைப்பு செய்திகள் (16/11/2022) | 7 PM Headlines

Update: 2022-11-16 13:57 GMT

மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு ...கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நாளை முதல் பூஜைகள் தொடங்குகிறது...

வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம், காடுகள் வளம்பெற வன விலங்குகள் அவசியம்.....வனவிலங்குகளுக்கான மாநில வாரியத்தின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.....

திராவிடர் என்பதை இனம் என தவறாக ஆங்கிலேயர் குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர்...சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த பழங்குடியின பெருமை தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.....

மயிலாடுதுறை காவிரிக்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற காவிரி துலா உற்சவம்....ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம்....

அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, மருத்துவர், செவிலியர் வருகை, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்...தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி...முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.... 

அடுத்த ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் தருணம்.....பிரதமர் மோடி பெருமிதம்... 

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா....ஏற்கனவே 2 முறை தோல்வியடைந்த நிலையில், இன்று விண்ணில் பாய்ந்தது ராக்கெட்...

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி....அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்....


Tags:    

மேலும் செய்திகள்