இன்றைய தலைப்பு செய்திகள் (12/11/2022) | 7 PM Headlines

Update: 2022-11-12 13:59 GMT

வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், நளினி....பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, நடைமுறைகளை செயல்படுத்தியது, சிறைத்துறை....

31 ஆண்டுகள் கழித்து தமது மகள் விடுதலையானது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்....தந்திடிவி பேட்டியில் நளினியின் தாயார் பத்மா உருக்கம்.....

10சதவீத இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்டால், வருங்காலத்தில் சமூக நீதி உருக்குலைந்து போகும்...அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை... 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு....ஆடல், பாடலுடன் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிப்பு..

தமிழக பாஜக நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு....மக்களுக்கான வளர்ச்சி குறித்து ஆலோசித்ததாக தகவல்.....

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது...அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தகவல்...

தனித்தீவு போல் காட்சி தரும், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட மதனந்தபுரம்...வீடுகளை சூழ்ந்த மழை நீரால் மக்கள் அவதி...

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சீர்காழியில் வெளுத்து வாங்கிய மிக கனமழை.....தனித்தீவு போல் மாறிய சீர்காழி தாலுகாவின் கழுகுப்பார்வை காட்சி.....

சென்னையில் சாலையோரம் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம்....மேயர் பிரியா தகவல்.....

சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்..ஆட்சியர்கள், அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..


Tags:    

மேலும் செய்திகள்