1950இல் பெங்களூருவில் ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்த ரஜினிகாந்த், பள்ளி கல்வியை முடித்த பின், பேருந்து நடத்துடனராக பணியாற்றினார். பின்னர் சென்னை
அடையாறு திரைபட கல்லூரியில் நடிப்புத் துறை டிப்ளமோ பெற்றார். 1975இல் இயக்குனர் பாலசச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த்,
பின்னர் 160 படங்களில் தொடர்ந்து நடித்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார்.அவரின் அரசியல் வாழ்க்கை பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். 1995இல்
இயக்குனர் மணிரத்தன்ம் அலுவலகம் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலை கண்டனம் செய்து, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவத் தொடங்கியுள்ளது
என்று பேசி, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானார்.
1996இல் திமுக, த.மா.க கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தமிழகத்தில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால், இனி ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பற்ற முடியாது என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
1998 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - த.மா.கா கூட்டணிக்கு மீண்டும் ஆதரவளித்தார். 2002இல் பாபா படத்தை வெளியிட பாமக எதிர்ப்பு தெரிவித்த பின், வட மாவட்டங்களில் ரஜினி ரசிகர்களுக்கும், பாமகவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
2002 அக்டோபரில் காவேரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழ் திரைபட உலகினர் நெய்வேலியில் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், அடுத்த நாளன்று
சென்னையில் உண்ணாவிரத போரட்டத்தை நடத்தினார். நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார்.
2004 நாடாளுமன்ற தேர்தலில், பாமகவிற்கு எதிராக வாக்களிக்கும்படி, தனது ரசிகர்களிடம் கூறினார். தான் பாஜகவிற்கு வாக்களித்தாக கூறினார்.
2017 டிசம்பர் 31இல், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக முதல் முறையாக அறிவித்தார். 2020 மார்ச்சில், தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே
நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி, அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
2020 அக்டோபரில், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
2020 டிசம்பர் 3இல், 2021 ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக மீண்டும் அறிவித்தார். ஆனால் ஹைதிராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்து,
ரத்த அழுத்தம் காரணமாக சென்னை திரும்பிய ரஜினி, உடல் நலப் பிரச்சனை காரணமாக கட்சி தொடங்க முடியவில்லை என்றும், தன்னை மன்னியுங்கள் என்று டிசம்பர் 29இல் அறிக்கை வெளியிட்டார்.
தமிழக திரைபட, அரசியல் வரலாற்றில், முத்திரை பதித்த ரஜினிகாந்த் பிறந்த தினம்,
1950, டிசம்பர் 12.