இன்றைய தலைப்பு செய்திகள் (14-06-2023)

Update: 2023-06-14 15:52 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் இன்று அதிரடி கைது... நெஞ்சுவலியால் கதறி துடித்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி... பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் ஒப்புதல்...

மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்... மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு... பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது எனவும் ஆவேசம்...

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்... ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு...

தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும்... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து... கைது நடவடிக்கையில் கடுகளவு கூட காழ்ப்புணர்ச்சி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்