காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- விக்கிரவாண்டியில், வெகு விமரிசையாக நடந்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு..... 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார், விஜய்...கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தையும் வெளியிட்டார்...
- பிளவுவாத சக்திகளும், ஊழல்வாதிகளும் தான் த.வெ.க.வுக்கு எதிரிகள் என விஜய் ஆவேசம்... திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள் என்றும் தாக்கு...
- அரசியல் களத்தில் இருந்து ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை என விஜய் திட்டவட்டம்.... த.வெ.க.வுடன் கூட்டணி வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனவும் அறிவிப்பு...
- சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என த.வெ.க. மாநாட்டில் உறுதி... சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் வலியுறுத்தல்...
- காய்த்த மரம் தான் கல்லடிபடும்... தி.மு.க. ஒரு ஆலமரம், விமர்சகர்களை எதிர்கொள்ளும்... வார்த்தைக்கு, வார்த்தை யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்...
- விஜய்யின் பேச்சு சரவெடி அல்ல, புஸ்வாணம் தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்... மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லுங்கள் எனவும் வாழ்த்து...
- எங்கள் கொள்கைக்கு எதிரானது விஜய் கட்சியின் கொள்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து... விஜயை கண்டு யாரும் பயப்பட மாட்டார்கள் எனவும் பேட்டி...
- பாமகவின் 90 சதவீத கொள்கைகளைத் தான் விஜய் பேசி இருக்கிறார்... பாமக வழக்கறிஞர் பாலு வரவேற்பு...
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற வி.சி.க.வின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது... த.வெ.க. தலைவர் விஜய்க்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து...
- த.வெ.க. மாநாட்டுத் திடலில் விஜய்யை பார்க்க இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடிய தொண்டர்கள்...போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு...
- உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறினார், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா.... காலிறுதிச் சுற்றில் சீன வீராங்கனை குயான் தியான்யி-யிடம் தோல்வி....
- எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை வென்று ஆப்கானிஸ்தான் ஏ அணி அசத்தல்... இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்...