காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (17-10-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (17-10-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-17 04:26 GMT
  • நெல்லூர் - புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்... . 
  • சென்னையில், வெள்ள நீர் முழுமையாக வடிந்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இன்று திறப்பு... மழையால் வெறிச்சோடியிருந்த சாலைகள் மீண்டும் பரபரப்பாக மாறின...
  • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் இன்று, 2 மீட்டர் வரை கடல் சீற்றம் இருக்கும்.. பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் எச்சரிக்கை...
  • திருப்பதி மலையில் தொடர் கனமழையால் பக்தர்கள் கடும் அவதி... எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தல்...
  • ரெட் அலர்ட் கிடைக்கப் பெற்றதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்... மழை நீர் முழுமையாக அகற்றப்படும் வரை தொய்வின்றிக் களப்பணியை தொடர்ந்திடுவோம் என்றும் உறுதி...
  • சென்னை பட்டாளம் பகுதியில் 2 நாள்களாக, இடுப்பளவு தேங்கியிருந்த மழை நீர் வடிந்ததால் பொது மக்கள் நிம்மதி... 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் களமிறங்கியதால், சீரடைந்தது...
  • சென்னையில், சராசரியாக 131 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல்... 500க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதாகவும் விளக்கம்...
  • "ஓ.எம்.ஆரில் தண்ணீர் தேங்கியதற்கு மெட்ரோ ரயில் பணிகள் தான் காரணம்..." பெருமழை பெய்த போதிலும் போக்குவரத்து சீராக இருந்தது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்...
  • எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யக்கூடாது என அமைச்சர் பொன்முடி பேச்சு... முதல்வரின் துரித நடவடிக்கையால் மழைநீர் வடிந்துள்ளது என்றும் விளக்கம்...
Tags:    

மேலும் செய்திகள்