காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-16 01:06 GMT
  • சென்னையில் நள்ளிரவில் தூரல் மழை பெய்ததால் பாதிப்பு குறைவு... மழை வெளுத்து வாங்கும் என எச்சரித்த நிலையில் சற்று நிம்மதி...
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்த்த மழை.. பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழையால் கடும் பாதிப்பு...
  • கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு...
  • கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு... மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கனமழை காரணமாக நிவாரண முகாமில் தங்க உள்ளவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நலம் விசாரித்தார்... நிவாரண முகாம்களில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்...
  • வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரவிலும் ஆய்வு... திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை கேட்டறிந்தார்...
  • கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறக்கத்தான் வேண்டுமா?... மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி...
  • சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து எதிரொலி... ஆவடியில் இருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்...
  • தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் நிவாரண முகாமில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம்... மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வசிக்கும் நிலை...
Tags:    

மேலும் செய்திகள்