Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-10-14 00:56 GMT
  • 5 ஆண்டுகளுக்கு பின், தமிழகம் வந்தார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி... காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தமிழகம் வருகை.... சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்...
  • சென்னையில் திமுக மகளிரணி சார்பாக இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பங்கேற்கிறார்... முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட பல்வேறு தேசிய கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்...
  • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன... மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு, இரு அணிகளும் இந்திய மண்ணில் பலப்பரீட்சை நடத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..
  • குஜராத்தில் இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்க்கின்றனர்... கிரிக்கெட் மைதானத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான அளவில் ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு...
  • "ஆபரேசன் அஜய்" திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 2வது கட்டமாக 235 இந்தியர்கள் மீட்பு..... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் பதிவு....
  • ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து 14 பேர் தமிழகம் திரும்பினார்கள்.... எச்சரிக்கை ஒலித்ததும் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்ததாகவும், அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் உருக்கமான தகவல்...
  • வார இறுதியில், காசா மீது தரை வழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டம்... ஆப்கனில் அமெரிக்கா வீசியதை விடவும் அதிக அளவிலான குண்டுகளை, ஒரே வாரத்தில் இஸ்ரேல் வீசியதாக தகவல்...
  • டெல் அவிவில் சைரன் ஒலியை கேட்டதும், பாதுகாப்பான இடங்களை தேடி சிதறி ஓடிய பொதுமக்கள்........... இஸ்ரேலிய ராணுவம் சைரன் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு..........
  • தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 800 ரூபாய் அதிகரிப்பு... ஒரு கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்ததால் பெண்கள் அதிர்ச்சி...
  • முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 17, 18ஆம் தேதிகளில், மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது... ஸ்ரீபெரும்புதுரில் நடைபெறும் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்...
Tags:    

மேலும் செய்திகள்