Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-10-2023) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-10-2023) | Morning Headlines | Thanthi TV
- காசாவில் 3600 இடங்களை குறி வைத்து, வான் வழியாக 4 ஆயிரம் டன் எடை கொண்ட வெடிகுண்டுகளை வீசியது, இஸ்ரேல்... ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக, இஸ்ரேல் விமானப் படையில் வெடிகுண்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்...
- பொதுமக்கள் மீது கண்மூடித் தனமாக இஸ்ரேல் தாக்குகிறது... பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம்...
- அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்துவதாக, இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அமைச்சர் பிளிங்கன் குற்றச்சாட்டு... இஸ்ரேலுக்கு உதவுவதில், அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகவும் டெல்அவிவ் நகரில் பேட்டி...
- ஹமாஸ் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம் என இஸ்ரேல் ராணுவம் ஒப்புதல்... ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிப்போம் எனவும் சூளுரை...
- இஸ்ரேலின் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு இடையே, மின்சாரம் இன்றி தவிக்கும் காசா மருத்துவமனைகள்.. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு எகிப்து, கத்தார் மற்றும் ஐ.நா. சபைக்கு ஹமாஸ் வேண்டுகோள்...
- காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஃபா எல்லை வழியாக அத்தியாவசிய உதவிகளை வழங்க எகிப்து முடிவு... மனிதாபிமான உதவிகள் வழங்கும் இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எகிப்து வேண்டுகோள்...
- ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி துவக்கம்... டெல்அவிவ் நகரில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது... தாயகம் திரும்பும் இந்தியர்கள் மகிழ்ச்சி...
- இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் தேவைப்பட்டால் விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படும்... போர் விமானங்கள் தயாராக இருப்பதாகவும் இந்திய விமானப்படை தகவல்...
- ஜெருசலேம் புனித பயணம் சென்ற 96 பேரை எகிப்து வழியாக அழைத்து வர நடவடிக்கை... அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்...
- 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது... நவம்பர் 7ஆம் தேதியன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர், மிசோராம் மாநிலங்களில் இன்று வேட்பு மனு தாக்கல்...
- இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நடுநிலையாக செயல்பட வேண்டும்... இந்தியா கூட்டணி சார்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்
- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது... தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில், மேலாண்மை ஆணையம் கூடுகிறது...
- சென்னை சேப்பாக்கத்தில் இன்று, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி... நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை...