Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-07-07 00:53 GMT
  • பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை... மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்ப்பு...
  • அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் நிலுவையில் உள்ளதால் ஆதாரப்பூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்... சட்ட அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்.....
  • அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை... முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை அரசு அளிக்காததால் முடிவெடுக்க முடியவில்லை எனவும் ஆளுநர் விளக்கம்..
  • அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றுவதற்காக தந்திரமான நடவடிக்கையில் ஆளுநர் ரவி ஈடுபடுவதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு... ஆளுநர் மாளிகையில் கோப்புகளை பெற்றுக் கொண்டு, அதற்கான ஒப்புதலும் அளித்துவிட்டு தற்போது கோப்புகளே வரவில்லை என்று மறைப்பதா? எனவும் கேள்வி
  • அவதூறு வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு....குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது...... 
  • 2019 மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.... மேல்முறையீடு செய்ய ஏதுவாக, உத்தரவு 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்பு...
  • செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதியின் விசாரணை எப்போது என இன்று முடிவு...
  • அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து..... ஆட்சியை காப்பாற்றவே, செந்தில் பாலாஜியும் காப்பாற்றப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.....
  • திமுகவினரின் அச்சுறுத்தல் அரசியல் தன்னிடம் எடுபடாது என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை... மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதியின் பேச்சில் தரம் இல்லை எனவும் விமர்சனம்...​




Tags:    

மேலும் செய்திகள்