Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-06-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-06-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-06-27 00:59 GMT
  • பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அரசாணை விரைவில் வெளியாகிறது... திட்டமிட்டபடி செப்டம்பர் 15ஆம் தேதியன்று குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமலுக்கு வரும்...
  • இந்தியாவில் தரமான கல்வி வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது... திராவிட மாடல் ஆட்சியால் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
  • சேலம் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் கருப்பு உடை அணிவதற்கு தடை... ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்த நிலையில் பல்கலைக் கழகம் அறிவிப்பு...
  • ஜூலை 2ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தள்ளிவைப்பு.... உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...
  • டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கு வோருக்கு பில் வழங்க முடிவு... ரயில் டெல் நிறுவனத்துடன் ரூ.294 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கணினி மயமாக்கப்படும் எனவும் அறிவிப்பு...
  • டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என மது பிரியர்கள் கருத்து... 3 மாதங்களுக்கு பின் மீண்டும் கூடுதலாக வசூலித்தால் என்ன செய்வது எனவும் கேள்வி...
  • சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏற முயன்றதால், கதவை உள் பக்கமாக பூட்டிய தீட்சிதர்கள்... கோயில் வைக்கப்பட்ட பதாகை விவகாரத்தில், தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு....
  • இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு...
  • சிதம்பரம் கோயிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றியது கண்டிக்கத்தக்கது... சட்டப்படி சந்திப்போம் என தீட்சிதர்கள் வழக்கறிஞர் தகவல்...
  • தமிழக அரசு, தனி சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும்... மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கோரிக்கை....
  • சிதம்பரம் கோவில் விவகாரத்தில், அரசும் சட்டமும் சொல்வதை தீட்சிதர்கள் மதிக்க வேண்டும்... விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு...


Tags:    

மேலும் செய்திகள்