Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-02-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-02-26 00:54 GMT
  • மாநில முதன்மை செயலாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு... குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை செயல்டுத்துவது குறித்து விவாதித்து முடிவெடுக்க ஆணை...
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்.... பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு...
  • மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என பதில் கூறினால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பதா?... ஈரோடு தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி...
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கும், கொடநாடு வழக்குக்கும் என்ன தொடர்பு? கொடநாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பேசுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்வி... 
  • சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது தனது முழு உரிமை என சபாநாயகர் அப்பாவு பேச்சு... எங்கு அமர வைப்பது என தமக்கு தெரியும் என்றும் திட்டவட்டம்... 
  • தமிழ் இப்போது வேகமாக மடிந்து கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு... தமிழை பாதுகாக்கவே தமிழைத் தேடி பயணம் என்றும் விளக்கம்... 
  • நாட்டின் தலைவிதியை இளம் தலைமுறையினர் நிர்ணயிக்க வேண்டும்.... கல்லூரி விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு....
  • மனித கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை விதிக்கும் சட்டத்தில் செயல்பாடுகள் என்ன? அறிக்கை தாக்கல் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
  • உக்ரைன் - ரஷ்யா போரில் எத்தகைய அமைதி நடவடிக்கைக்கும் இந்தியா பங்களிப்புதர தயார்.... இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமரிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி... 
  • பாரத் ஜோடோ யாத்திரையுடன் தனது இன்னிங்ஸ் முடிவுக்கு வருவதாக சோனியா காந்தி பேச்சு... அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...


Tags:    

மேலும் செய்திகள்