Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (02.01.2023)

Update: 2023-01-02 16:04 GMT

* "பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்"

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு...

வெறும் அரசாணை மூலம் நடைமுறைபடுத்தியது சட்ட விரோதம் என நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட கருத்து...


* தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம்

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம்...

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்திருந்த நிலையில் மீண்டும் பரபரப்பு...


* விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு

சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்...

மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவிப்பு...


* "பாமகவுக்கு அங்கீகாரம் வழங்கியதே அதிமுக தான்"

பாமகவுக்கு அங்கீகாரம் வழங்கியதே அதிமுக தான்...

அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனதற்கு அதிமுகவே காரணம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து...


* மாற்று பணி - அமைச்சர் உறுதி

கொரோனா பரவலின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை...

மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று உறுதி...


* ஆன்லைன் விளையாட்டு - வரைவு விதிமுறைகள்

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதமாக

வரைவு விதிமுறைகளை இன்று வெளியிட்டது மத்திய அரசு...

ஜனவரி 17ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனவும் அறிவிப்பு...


* அவமானகரமான சம்பவம் - டெல்லி முதலமைச்சர் வேதனை

டெல்லியில் கார் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு

பெண் பலியான விவகாரம்...

மிகவும் அவமானகரமான சம்பவம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை....

துணை நிலை ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்...



Tags:    

மேலும் செய்திகள்