"திருச்செந்தூர் கோயிலில் 7 மணிநேரம் நடை சாத்தப்படும்" - சந்திர கிரகணம் எதிரொலி - நிர்வாகம் அறிவிப்பு
"திருச்செந்தூர் கோயிலில் 7 மணிநேரம் நடை சாத்தப்படும்" - சந்திர கிரகணம் எதிரொலி - நிர்வாகம் அறிவிப்பு
நாளை மதியம் 2.39 மணி முதல் மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம்போல் அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும் என்றும் 4.30 மணிக்கு விஸ்வ ரூபம் தரிசனமும் 5 மணிக்கு உதய மார்த்தாண்டம் அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 7 மணிக்கு திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 7 மணிக்கு சம்ரோஷண பூஜையும், தொடர்ந்து அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்வும் நடக்க உள்ளதாகவும், கோயில் திறக்கப்படும் நேரத்தை அறிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.