“என் கண் முன்னே வெட்டினார்கள்.. வேண்டாம் வேண்டாம் என கதறினேன்“ - நடுங்க வைக்கும் சம்பவத்தை சொன்ன VAO மகன்

Update: 2023-04-27 08:59 GMT

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், லூர்து பிரான்சிஸின் மகன் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது....

சம்பவத்தன்று தந்தைக்கு மதிய உணவு அளிக்க அலுவலகம் சென்றபோது, அலுவலகத்தினுள் இருந்து வந்த கதறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியுற்றதாக லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான் தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தினுள் எனது தந்தையும், உடனிருந்த தலையாரியும், வெட்டாதீர்கள், வேண்டாம்.... என கதறுவதை கேட்டு பதற்றத்துடன் அலுவலகத்தினுள் நுழைந்ததாக கூறியுள்ளார்.

அப்போது உள்ளே இருந்த இருவரில், ஒருவர் எனது தந்தையின் இரு கைகளை சரமாரியாக வெட்டிய நிலையில், தலையில் கொடூரமாக தாக்கினார் என தெரிவித்திருக்கிறார்...

இதையடுத்து, உடனிருந்த மற்றொருவர் எனது தந்தையை இரும்பு கம்பியால், தலையில் தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் அப்பா என கூச்சலிட்டு தடுக்க சென்ற என்னை, இருவரும் சேர்ந்து உனது தந்தையை போலவே உன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மிரட்டிய தொணியிலயே இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக மார்ஷல் ஏசுவடியான் கூறியுள்ளார்.

இதையடுத்து தாமும், அலுவலகத்தில் இருந்தவர்களும் அப்பாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தாகவும்...

அங்கு தனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் எதற்காக அரங்கேறியதெனவும், ஏன் எனது தந்தையை வெட்டிக்கொன்றார்கள் எனவும் உடன் பணியாற்றவர்களிடம் கேட்டு தான் தெரிந்து கொண்டேன் என லூர்து பிரான்சிஸின் மகன் கூறியுள்ளார்.

கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் மணல் கடத்தியது தொடர்பாக எனது தந்தை புகாரளித்துள்ளார் எனவும்,

அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மாரிமுத்து என்பவரை அழைத்து வந்து எனது தந்தையை ராமசுப்பு வெட்டிக்கொன்றதாக லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்