"ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் தங்களிடம் இல்லை"-லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி

Update: 2023-07-14 12:35 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும், அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட விலைமதிப்புமிக்க பொருட்கள், 26 ஆண்டுகளாக பெங்களூரு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையின்போது, பட்டியலிடப்பட்ட பல பொருட்கள் நீதிமன்ற கருவூலத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. மனுதாரர் நரசிம்ம மூர்த்தி, வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்ற ஆவணங்களை இணைத்து கடிதம் எழுதினார். 28 வகையிலான ஆயிரக்கணக்கான பொருட்கள், லஞ்ச ஒழிப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் கர்நாடக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் தங்களிடம் இல்லை என்றும், அவரது நாமினியான பாஸ்கரனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டதாகவும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்