கோவிலில் சாமி சிலைகள்,சேலைகளை தீ வைத்துக் கொளுத்திய இளைஞர் - அதிர்ந்து போன ஊர் மக்கள்

Update: 2022-10-03 08:35 GMT

அரியலூரில் கஞ்சா போதையில் கோயிலை சூறையாடிய இளைஞரை பொதுமக்கள் லாவகமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் சுற்றுச் சுவருக்குள் எகிறி குதித்த கஞ்சா போதை இளைஞர் ஒருவர், சக்கரம், தேர் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மரங்கள், மற்றும் சாமிக்கு பயன்படுத்தும் சேலைகளை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள், மற்றும் மின்சாரப் பொருட்களை அடித்து துவம்சம் செய்துள்ளார்...

இதைக் கண்டு அதிர்ந்த பொதுமக்கள் அவறை சுற்றி வளைக்க முயன்ற நிலையில், போதை ஆசாமி மீண்டும் சுவர் ஏறி குதித்து பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்தார். விடாமல் விரட்டிச் சென்ற கிராம மக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கோயிலில் அட்டகாசம் செய்தது கீழ மாளிகை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சக்திவேல் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அந்த இளைஞர் போதையில் இவ்வாறு செய்தாரா அல்லது அவர் மன நலன் பாதிக்கப்பட்டவரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

Tags:    

மேலும் செய்திகள்