நள்ளிரவில் திடீரென அலறிய பெண்.. ஓடிப்போய் பார்த்த பெண் காவலர்.. சாலையிலே பிறந்த குழந்தை

Update: 2022-09-18 05:56 GMT

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 2.30 மணி அளவில் சாலையோரத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற தலைமை காவலர் இளவரசி, சக காவலருடன் சென்று அவருக்கு உதவியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில், 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி தேவையான உதவிகளை செய்துள்ளார். நள்ளிரவில் பெண் காவலரின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பெற்ற பெண் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த ஹபானா என்பதும், அவருடைய கணவர் பிரிந்து சென்ற நிலையில், சாலையோரத்தில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்