ராமநாதபுரம் மாவட்டம் ஆர். காவனூரைச் சேர்ந்த, பவித்ராவுக்கும், உச்சிப்புளியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பவித்ராவிற்கும் இடையர் வலசையைச் சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முத்துக்குமார் மனைவியை பிரிந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதே போல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருடனும், பவித்ரா தொடர்பில் இருந்ததாக தெரிகிறது
இதனை, பவித்ராவின் சகோதரர் மணிகண்டன் பலமுறை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த மணிகண்டன், பவித்ராவை வீடு புகுந்து இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...