பீகாரில் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை முழுவதும் ரத்து செய்யக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
பிகாரில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், தேர்வு முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு எதிராக, தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
இதில், பல மாணவர்கள் காயமடைந்தனர்.