விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்... தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய காவல்துறை

Update: 2023-03-21 17:18 GMT

கென்யாவில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வருவமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஓடிங்கா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, தலைநகர் நைரோபியில் ஏராளமானோர் ஓடிங்காவுடன் சேர்ந்து, அதிபர் மாளிகையை நோக்கி மனு அளிக்க ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஓடிங்கோவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காணப்பட்டது. அதே நேரத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்