பகுத்தறிவுடன் கேள்வி கேட்கும் மனப்பான்மையை மாணவிகள் வளர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்.
பட்டமளிப்பு விழாவில், 3 ஆயிரத்து 259 மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் 5 மாற்றுத்திறனாளி மாணவிகள் உட்பட 104 மாணவிகள், சிறப்புத்தகுதி பெற்று பதக்கமும் பட்டயமும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், தி.மு.க. எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டம் பெறுவது முடிவல்ல, தொடக்கம் எனக் கூறினார்.