"பிடிக்க சென்ற போலீசார்... போனை திருடி கள்ளச்சாராய கும்பல் அட்டூழியம்.." - நாகை அருகே அதிர்ச்சி
கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்கச் சென்றபோது, போலீசாரின் செல்போன்களை சாராய வியாபாரிகள் திருடி வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் ராமாபுரம் அருகே 2 கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது அங்கு வந்த சாராய வியாபாரிகளின் உறவினர்கள், பிரகாஷ் என்ற காவலநாகை அருகேரின் 2 செல்போன்களை திருடி ஒளித்து வைத்துள்ளனர். காவலர் செல்போனை தேடிய நிலையில், செல்போன் திருடியதை சொல்லாமல் ஒருமணி நேரம் போலீசாரை உறவினர்கள் அலைய விட்டுள்ளனர். பின்பு காவல் ஆய்வாளர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று எச்சரித்த நிலையில், ஒழித்து வைத்திருந்த 2 செல்போன்களையும் காவலரிடம் ஒப்படைத்தனர். பின்பு 2 சாராய வியாபாரிகளையும் கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.