மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து ஓட்டம் பிடித்த குற்றவாளி - விரட்டி பிடித்த போலீசார்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு பகுதியைச் சேர்ந்த கண்ணன், விநாயகர் சதுர்த்தியன்று மது போதையில் கலவரம் செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, திருமங்கலம் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென எனக் கூறி, அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிமன்றத்தில் கையெழுத்திட கண்ணன் போதையில் வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, நீதிபதி அவரை சிறையில் அடையுங்கள் என கூறியதால், அங்கிருந்து அவர் தப்பியோடிய நிலையில், போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.