விடுதலையான மறுநொடி கணவனை மீண்டும் கைது செய்ய வந்த போலீஸ்... சிறை வாசலிலேயே கட்டிப்பிடித்து கதறிய மனைவி
சிறைவாசலில் வைத்து இளைஞரை போலீசார் கைது செய்ய முயன்றபோது , இளைஞர் வாய் பேச முடியாதவர் எனக்கூறி அவரது வழக்கறிஞர்கள் இளைஞரை தப்பிக்க செய்த நிலையில், விசாரணையின் போது இளைஞர் பேசிய வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மோகன், சென்னை ஈசிஆர்-ல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் செல்போன், லேப்டாப் போன்றவைகளை திருடியதால், போலீசார், அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த 22 ஆம் தேதி மோகன் விடுதலையானபோது, அவரை சிறை வாசலில் வைத்தே போலீசார் மீண்டும் கைது செய்ய முயன்றபோது, அவரை கட்டியணைத்த படி, அவரது மனைவி சிறைவாசலில் களேபரம் செய்தார். மேலும், மோகன் வாய் பேச முடியாதவர் எனக்கூறி, அவரது வழக்கறிஞர்கள் அவரை தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.