திருப்பதி கோவிலுக்குள் ரகசியமாக வீடியோ எடுத்த நபர்... ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

Update: 2023-05-08 11:16 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்று வீடியோ எடுத்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்குப் பிறகே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய செல்போனை கொண்டு, தடைகளை மீறி வீடியோ எடுத்துள்ளார். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், வீடியோ எடுத்த நபரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, பாதுகாப்பில் ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்