நிஜ உலகின் இம்சை அரசனாக வலம் வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தன்னை பற்றி கூகுளில் தேடிய உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெடுபிடி ஆட்சிக்கு பெயர் போன வட கொரியாவில் உளவுத்துறை அதிகாரிகள் கூட அவ்வளவு எளிதாக இணையத்தளத்தை பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட துறை அதிகாரிகள் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், தன்னை பற்றி கூகுளில் தேடிய உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு கிம் ஜாங் உன் மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.