தலை தூக்கும் புதிய கொரோனா.. மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்! | Covid | Corona

Update: 2022-12-24 02:20 GMT

பண்டிகைகள் வருவதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனையை ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் அடிப்படையில் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனா இருப்பதை விரைந்து உறுதி செய்ய ஏதுவாக, கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும்,

மருத்துவமனைகளில் படுக்கைகள், உபகரணங்கள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ மனைகளில் சோதனை ஓட்டங்கள் செய்ய வேண்டும்.

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்

பண்டிகை காலங்களில் வருவதால், சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரங்குகளில் காற்றோட்ட வசதிகள் இருக்க வேண்டும், பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்