ஆதிபுருஷ்' படத்தில் மக்களின் மனதை புண்படுத்தியதற்காக நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோருவதாக, அப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டஷிர் சுக்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், இப்படத்தின் மூலம் மக்களின் மனம் புண்பட்டுள்ளதை ஒப்புக் கொள்வதாகவும், இதற்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எனது கடவுள் அனுமன் நம்மை ஒற்றுமையாக வைத்திருப்பார் எனவும், நமது புனிதமான நாடு மற்றும் சனாதனத்திற்கு உழைக்க நமக்கு சக்திகளை வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.