கேரளாவை உலுக்கிய பெண் டாக்டர் கொலை..மருத்துவர்கள் எடுத்த அதிரடி முடிவு- நோயாளிகள் அதிர்ச்சி | Kerala

Update: 2023-05-10 12:33 GMT

கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் இளம் பெண் மருத்துவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, நடைபெற்று வரும் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு பொது மக்களையும், நோயாளிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்