கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியின் துணைத் தலைவர், முத்துக்குமரன். 42 வயதான இவர், பதினெட்டு ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிவருகிறார்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 33ஆவது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியில், துணைத்தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப் பட, கட்சியின் முடிவுப்படி துணைத் தலைவராக ஆனார், முத்துக் குமரன்.
அன்றாடம், நகராட்சி அலுவலகத்துக்கு ஆட்டோவில் சென்று, அலுவலகப் பணிகளை கவனிப்பது, நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவது, மக்களிடம் குறைகேட்பது என பொதுப் பணிகளைச் செய்துவருகிறார்.
இப்படி பொதுப்பணிகளை ஒருபுறம் செய்யும் முத்துக்குமரன், தன் குடும்பத்துக்கான வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 22 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுவதே இவரின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. இப்போதும் அதைக் கைவிடாமல், மக்கள் பணியை முடிந்ததும், கௌர வம் பார்க்காமல், ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்செல் கிறார்.
நகர்மன்றத் துணைத்தலைவர் பதவியில் இருந்துகொண்டு, இப்படி ஆட்டோ ஓட்டுகிறாரே என கிண்டலும் செய்கிறார்கள் என்கிறார், முத்துக்குமரன்.
தங்களுடன் ஆட்டோ ஓட்டிவரும் முத்துக்குமரன், பதவிக்கு வந்தபின்னரும் மாறிவிடவில்லை என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள், சக ஆட்டோ ஓட்டுநர்கள்.