திருவேற்காட்டில் மழை நீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். திருவேற்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் நாசர், முழங்கால் அளவு நீரில் இறங்கி குடியிருப்பு வாசிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது இடுப்பளவு தண்ணீரில் கைக்குழந்தையுடன் வந்த நபரிடம் இருந்து குழந்தையை வாங்கிய அமைச்சர் நாசர் அந்த குழந்தையைக் கொஞ்சி ராஜமாதா பாகுபலியைத் தூக்குவதைப் போல் தலைக்கு மேல் தூக்கி விளையாட்டு காட்டி மகிழ்ந்தார்.