எஸ்.ஐ.யை இரும்பு கம்பி கொண்டு மிரட்டிய நபர்...நெல்லையில் பரபரப்பு...

Update: 2023-01-29 22:06 GMT

நெல்லை சந்திப்பு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட எஸ்.என் ஹைரோடு பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் ஜெனகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ராஜ்குமார் என்பவரது கடையில், புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சோதனைக்கு சென்றபோது, 432 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் அவரை விசாரிக்க முயற்சித்தபோது, காவல் உதவி ஆய்வாளரை, ராஜ்குமார் இரும்பு கம்பி கொண்டு மிரட்டி உள்ளார்.

இதனை அடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஜெனகன் புகாரின் பேரில், ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்