தனியாக லாட்ஜில் இருந்த கணவன் - திடீரென வந்த குறுஞ்செய்தி...மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-06-24 11:02 GMT

பத்துகாணி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் பிரபல நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி நளினி மதுரையில் ஆசிரியையாக உள்ளார். இந்நிலையில், பத்துகாணியில் உள்ள இவர்களின் வீட்டை அருமனையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கு வாடகைக்குக் கொடுத்த நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக வீட்டைக் காலி செய்யுமாறு ஹரிஹரன் பலமுறை தமிழ்செல்வியிடம் கூறியும் அவர் வீட்டைக் காலி செய்யவில்லை என தெரிகிறது. இதையடுத்து ஹரிஹரன் ஆட்சியரிடமும், காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார்... ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் மனம் உடைந்த ஹரிஹரன் மார்த்தாண்டத்தில் உள்ள லாட்ஜில் இருந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவி நளினிக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நளினி அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தமிழ்ச்செல்வி வீட்டைக் காலி செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என நளினி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்