"சம்பளம் குறைவாக உள்ளது" - திட்டி கொண்டே இருந்த மனைவியை... அடித்தே கொன்ற கணவன் - சேலத்தில் நடந்த பயங்கரம்

Update: 2022-10-13 14:16 GMT

சேலத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை சென்னை சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.......

சம்பளம் குறைவாக உள்ளதாக கூறி, திட்டிக்கொண்டே இருந்ததால் அடித்து கொலை செய்ததாக கணவன் வாக்குமூலம்........

சேலம் சீலநாயக்கன்பட்டி வேலுநகர்தெருவில் ராஜசேகரன்(42) மற்றும் அவரது மனைவி கார்த்திகைசெல்வி(35) வசித்து வந்தனர். இவர்களுக்கு சக்தி என்ற மகள்(10) உள்ளார்.ராஜசேகரன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். மனைவி கார்த்திகைசெல்வி வீட்டிலேயே டைலரிங் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் மனைவி கார்த்திகைசெல்வியை கொலை செய்துவிட்டு கணவர் ராஜசேகரன் வீட்டில் இருந்து தப்பியோடினர்.

அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுந்துள்ளார். வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகைசெல்வி சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது தலைமறைவாக இருந்த கணவர் ராஜசேகரனை சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் சென்னை விரைந்து ராஜசேகரனை மடக்கிபிடித்து கைது செய்து அழைத்துவந்தனர். பின்னர் ராஜசேகரனிடம் விசாரணையில் மனைவி கார்த்திகை செல்வி அடிக்கடி பணம்கேட்டு வந்துள்ளார். சம்பளம் குறைவாக இருந்ததால் கேட்ட பணத்தை கொடுக்க முடியவில்லை, இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக மனைவி ஆபாசவார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததால் ஆத்திரமடைந்து அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொலை செய்த ராஜசேகரனை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்