புதையலில் கிடைத்த தங்கம்...ஆசை வார்த்தையை நம்பிய வியாபாரி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Update: 2022-09-16 02:23 GMT

கோவை கருமத்தம்பட்டி வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் இரு வருடமாக, மளிகை கடை நடத்தி வந்த நிலையில் இரு இளைஞர்கள் பொருட்கள் வாங்கி நட்பு ஏற்படுத்தி கொண்டனர். பின்னர்,சதாசிவத்திடம் 100 மில்லி கிராம் தங்கத்தை காண்பித்து புதையலில் கிடைத்ததாக கூறியுள்ளனர். பின்னர் ஒரு கிலோ தங்கம் தருவதாக கூறி, 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். ஆசை வார்த்தையை நம்பிய வியாபாரி சதாசிவம் தங்க குண்டுமணிகளை பெற்று கொண்டு 10 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் வாங்கிய தங்கத்தை பரிசோதனை செய்த போது, அது அலுமினியம் என்பது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதாசிவம்,கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்