டக் என காலில் விழுந்து கதறிய பெண்...கட்டி தழுவிய தமிழிசை சவுந்திரராஜன் - ஆறுதல் கூறிய காட்சிகள்

Update: 2023-02-15 14:21 GMT

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் குறைகளை கூறி கதறி அழுத வயதான பெண்ணை துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அஞ்சலை என்ற அந்த வயதான பெண்ணின், இரண்டாவது மகள் பெரியநாயகம் என்பவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்து விட்டதாக கூறி, அவரது நிலத்தை போலியாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை மீட்டு தர தனது மகன், மருமகளுடன் வந்த அஞ்சலை மனு அளித்த நிலையில் கண்ணீர் விட்டு தனது கோரிக்கையை ஆளுநரிடம் தெரிவித்தார். அப்போது, அந்த வயதான பெண்ணிற்கு தமிழிசை ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்