கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு வேறொருவருடன் மலர்ந்த காதலால் நேர்ந்த கதி.. கழிவறையில் கிடந்த ரத்தம்.. வீடேறி வந்து வெறிச்செயல்
பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையம் அபிராமி நகரில் வசித்து வருபவர் காமாட்சி. இவர் கனவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், உடன் பணிபுரிந்து வந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருமணம் செய்துகொள்ளுமாறு பிரகாஷ் கூறி தொந்தரவு செய்து வந்ததால், மறுப்பு தெரிவித்த காமாட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் சில நாட்கள் தொந்தரவு செய்யாமல் இருந்த பிரகாஷ், கமாட்சியின் வீட்டுக்கு சென்று கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், காமாட்சியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.