மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு "சிவ வாத்தியம்" முழங்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கூறைநாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. இதையடுத்து, மாயூரநாதர் கோவில் யானையான அபயாம்பிகை சிவவாத்தியங்களுடன் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டது. யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து, பழங்கள், சர்க்கரை வழங்கி தீபாராதனையும் செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் யானைக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினர்.